அச்சுறுத்தும் அரசு அலுவலக கட்டடங்கள் அகற்றலாமே! முற்றிலும் சேதத்தால் விபத்துக்கு வாய்ப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
அச்சுறுத்தும் அரசு அலுவலக கட்டடங்கள் அகற்றலாமே! முற்றிலும் சேதத்தால் விபத்துக்கு வாய்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
05:08

சிவகாசி : விருதுநகர் மாவட்டத்தில் நகர்,கிராம பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்களின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. முற்றிலும் சேதம் அடைந்த கட்டடங்களை விபத்து ஏற்படும் முன்பு முழுமையாக அகற்ற வேண்டும்.



மாவட்டத்தில் நகராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ,விவசாய அலுவலகம்,வி.ஏ.ஓ.,அலுவலகம்,பள்ளி கட்டடங்கள் என ஏராளமான அரசு கட்டடங்கள் உள்ளன. இக்கட்டடங்கள் அனைத்தும் குறைந்தது 70 முதல் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.இவற்றில் பெரும்பாலானவை பயன்பாட்டில் இல்லாமல் சேதமடைந்துள்ளது. இதற்கு பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.



பழைய கட்டடங்கள் ஏதேனுமொரு பயன்பாட்டிற்காக செயல்பட்டு வருகிறது. சில இடங்களில் சேதமடைந்த கட்டடங்களில் அரசு அலுவலகம் இன்று இயங்கி வருகிறது. இது போன்ற அலுவலகங்களுக்கு தினமும் எண்ணற்ற மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வருகின்றனர். சேதமடைந்த கட்டடங்கள் அருகே தான் பெரும்பாலும் மக்கள் ஓய்வு எடுக்கின்றனர். அவ்வபோது சேதமடைந்த கட்டடங்களின் சன்சைடு,கூரை பெயர்ந்து விழுவதும் தொடர்கிறது.



பொதுமக்களுக்கு காயத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு இடங்களில் உள்ள சேதமடைந்த பயன்பாடில்லா கட்டடங்களை பாம்பு, உள்ளிட்ட விஷ பூச்சிகள் தங்களின் இருப்பிடமாக பயன்படுத்துகின்றன. பொதுமக்கள் காத்திருக்கையில் இவைகள் வெளியில் நடமாடி அச்சத்தை ஏற்படுத்துகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. சேதமடைந்துள்ள கட்டடங்களை சீரமைப்பதோடு, முற்றிலும் சேதமடைந்த பயன்பாட்டில் இல்லா கட்டடங்களை அகற்றிட வேண்டும்........



நடவடிக்கை அவசியம்



மாவட்டத்தில் சேதம் அடைந்த கட்டடங்கள் பதிலாக புதிய கட்டடங்கள் கட்டப்பட்டும் பழைய கட்டடங்கள் அதே இடத்திலேயே உள்ளன. இக் கட்டடங்களில் சிறிய அளவு சேதம் அடைந்ததால் பராமரிக்கலாம். முற்றிலும் தேமடைந்திருந்தால் அகற்றிவிடவேண்டும் . கிராமப்பகுதிகளில் சேதமடைந்த கட்டடங்களின் அருகே குழந்தைகள் விபரிதம் தெரியாமல் விளையாடுகின்றனர். அம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு நடவடிக்கை அவசியமாகிறது.பிரகாஷ், சமூக ஆர்வலர், சிவகாசி.............

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X