கேள்விக்குறி; கடலூர் பஸ் நிலையத்தில் சுகாதாரம்...அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
05:27

மாவட்டத் தலைநகரான கடலுாரில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரி மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.



புறநகர் செல்லும் பஸ்கள் மட்டுமின்றி நகர்ப்புற பஸ்களும் வருவதால், பஸ் நிறுத்த இடம் பற்றாக்குறை உள்ளது.இதனால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்த இடம், கடைகள், கழிவறை, புறநகர் காவல் நிலையம் இயங்குகிறது.நாளுக்கு நாள் பயணிகள் வரத்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.



பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகள் பராமரிப்பின்றி உள்ளது. தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பயன்படுத்த முடியாத நிலை. பயணிகள் காத்திருக்கும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அடிக்கடி ஆக்கிரமிப்பு அகற்றினாலும் பலனில்லை. பல இடங்களில் நடைபாதைகள் உடைந்துள்ளன.அங்குள்ள மணிகூண்டும் இயங்கவில்லை.முக்கிய தேவையான குடிநீர் வசதிக்கென ஒரே ஒரு டேங்க் வைக்கப்பட்டுள்ளது.அதை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் இலவச கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் செயல்படுகிறது.



ஆனால், இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இலவச கழிப்பிடம் பக்கம் சென்றால் நோய் தான் வரும்.அங்கு தண்ணீர் வசதி இல்லை. அதன் வழியாக மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது.பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வெளி வாகனங்கள் வர தடை உள்ளது. ஆனால், வாகன நிறுத்தமாக பஸ் நிலையம் செயல்படுகிறது. இதனால், கடலுார் பஸ் நிலையத்திற்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.



தமிழகத்தில் வருவாய் குறைவாக உள்ள பஸ் நிலையத்தில் கூட சேவை நோக்குடன் பயணிகள் காத்திருப்பிற்காக இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எனவே, கடலுார் மாவட்ட நிர்வாகம், கடலுார் பஸ் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raajaa -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202114:17:15 IST Report Abuse
raajaa அந்த ஊரே நாற்றம் பிடித்த ஊர். வாந்தி எடுத்தா மாதிரிதான் இருக்கும். எங்கு பாத்தாலும் குப்பை. மூத்திர நாத்தம், மூடப்படாத சாக்கடைகளில் தேங்கி நிற்கும் கும்பி நாத்தம், அடாவடி Share ஆட்ேடாக்கள், ஊரா அது கருமம்.
Rate this:
Cancel
Raajaa -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202114:11:55 IST Report Abuse
Raajaa எல்லா ஊர்களிலும் பஸ் நிலையங்கள் அப்படித்தான். தமிழ்நாட்டுக்கு சாபக்கேடு. முத்திர நாற்றம்தான் வரவேற்கும். விழுப்புரம் பஸ் நிலையம் படுமோசம். சென்னை போகும் பஸ்கள் மூத்திரத்தில்தான் நிற்கும்.| செங்கல்பட் Bus நிலையம் மூத்திர நாற்றத்தின் உச்சம். தாம்பரம் செல்லும் Busகள் மூத்திர குளத்தில்தான் நிற்கும். பேருந்து கிளம்பும் வரை மூத்திர நாற்றம் நாசிகளில் ஊடுருவி வாந்தி எடுக்காத குறைதான். பேருந்து நிலையமும் முத்திர வாடையும் ஒட்டிப் பிறந்தவைகள். சிங்காரச் சென்னை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கோயம்பேடு பஸ் நிலையத்தின் கேடுகெட்ட நிலையை கேட்கவே வேண்டாம். எங்கு பாத்தாலும் குப்பை எச்சில் மூத்திர நாத்தம். டீக்கடை காரர்களின் அட்டூழியம் . இதை எல்லாம் சரி செய்ய வே முடியாது.
Rate this:
Cancel
Narayanan K -  ( Posted via: Dinamalar Android App )
17-செப்-202107:57:53 IST Report Abuse
Narayanan K இதைவிட மோசமான நிலையில் சிதம்பரம் பேருந்து நிலையம் உள்ளது. பராமரிப்பு அரவே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X