கேள்விக்குறி; கடலூர் பஸ் நிலையத்தில் சுகாதாரம்...அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி | கடலூர் செய்திகள் | Dinamalar
கேள்விக்குறி; கடலூர் பஸ் நிலையத்தில் சுகாதாரம்...அடிப்படை வசதிகளின்றி பயணிகள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
05:27

மாவட்டத் தலைநகரான கடலுாரில் பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, புதுச்சேரி மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வருகின்றனர்.



புறநகர் செல்லும் பஸ்கள் மட்டுமின்றி நகர்ப்புற பஸ்களும் வருவதால், பஸ் நிறுத்த இடம் பற்றாக்குறை உள்ளது.இதனால் பஸ்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்த இடம், கடைகள், கழிவறை, புறநகர் காவல் நிலையம் இயங்குகிறது.நாளுக்கு நாள் பயணிகள் வரத்து அதிகரித்து வரும் நிலையில், பயணிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லாதது பெரும் குறையாக உள்ளது.



பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கான இருக்கைகள் அமைக்கப்பட்டன. ஆனால், அவைகள் பராமரிப்பின்றி உள்ளது. தாய்மார்கள் பாலுாட்டும் அறையும் பயன்படுத்த முடியாத நிலை. பயணிகள் காத்திருக்கும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அடிக்கடி ஆக்கிரமிப்பு அகற்றினாலும் பலனில்லை. பல இடங்களில் நடைபாதைகள் உடைந்துள்ளன.அங்குள்ள மணிகூண்டும் இயங்கவில்லை.முக்கிய தேவையான குடிநீர் வசதிக்கென ஒரே ஒரு டேங்க் வைக்கப்பட்டுள்ளது.அதை பயணிகள் பயன்படுத்த முடியவில்லை. மேலும் இலவச கழிப்பிடம் மற்றும் கட்டண கழிப்பிடம் செயல்படுகிறது.



ஆனால், இங்கு சுகாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. இலவச கழிப்பிடம் பக்கம் சென்றால் நோய் தான் வரும்.அங்கு தண்ணீர் வசதி இல்லை. அதன் வழியாக மூக்கை பிடித்து செல்லும் நிலை உள்ளது.பஸ் நிலையத்திற்குள் இருசக்கர வாகனங்கள், கார் உள்ளிட்ட வெளி வாகனங்கள் வர தடை உள்ளது. ஆனால், வாகன நிறுத்தமாக பஸ் நிலையம் செயல்படுகிறது. இதனால், கடலுார் பஸ் நிலையத்திற்கு வரும் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.



தமிழகத்தில் வருவாய் குறைவாக உள்ள பஸ் நிலையத்தில் கூட சேவை நோக்குடன் பயணிகள் காத்திருப்பிற்காக இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. எனவே, கடலுார் மாவட்ட நிர்வாகம், கடலுார் பஸ் நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X