போலீஸ் டைரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
06:13

விபத்தில் இருவர் பலி மதுராந்தகம்: சித்தாமூர் அடுத்த சிறுமையிலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலைவாணன், 40. இவர், பெரிய கழப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தட்சணாமூர்த்தி, 40, என்பவரோடு, நேற்று முன்தினம் இரவு, இருசக்கர வாகனத்தில் கோட்டைபுஞ்சை - சிறுமையிலுார் சாலையில் சென்றார். பரிக்கல் கிராமம் அருகே, எதிரே வந்த டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதியதில், கலைவாணன், தட்சணாமூர்த்தி அதே இடத்திலேயே உயிரிழந்தனர். அச்சிறுப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.ரவுடிகள் இருவருக்கு 'குண்டாஸ்'ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே கிளாய் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வா, 32. ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி வி.ஆர்.பி.,சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 33. ரவுடிகளான இருவரும் ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலைய எல்லையில் அடிதடி, வழிப்பறி, கொலை முயற்சி உள்ளிட்ட பல குற்றங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.இருவரையும் குண்டர் தடுப்பு காவலில் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பரிந்துரையின்படி, மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, விஸ்வா, முருகன் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில், நேற்று கைது செய்யப்பட்டனர்.7 சவரன் நகை கொள்ளைஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த கண்டிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகரன், 58; மண்பாண்டம் செய்பவர். இவரது மனைவி, மகள்கள் உறவினர் வீட்டிற்கு சென்றனர். தனசேகரன் நேற்று, வீட்டை பூட்டி சாவியை வீட்டின் வெளியே வழக்கமாக வைக்கும் இடத்தில் வைத்து சென்றார். மாலை வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த 7 சவரன் நகையை, மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.பணம், நகை திருட்டுதிருத்தணி: திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் நாகபூஷணம், 54. நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் ஜாத்திரை விழாவிற்காக பள்ளிப்பட்டு அடுத்த கேசவராஜ குப்பம் கிராமத்திற்கு சென்றார்.நேற்று காலை வீட்டிற்கு வந்த போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 1.15 லட்சம் ரூபாய், 850 கிராம் வெள்ளி, ஒரு சவரன் நகை ஆகியவை திருடப்பட்டது தெரிந்தது. திருத்தணி குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.ஓட்டலில் திருடிய இருவர் சிக்கினர்திருத்தணி: திருத்தணி கே.கே.நகரைச் சேர்ந்தவர் கோட்டீஸ்வரன் மனைவி முனியம்மா, 38, நடத்தும் ஓட்டலில், திருவண்ணாமலை மங்கல் நகரைச் சேர்ந்த சங்கர், 40, என்பவர் சமையல் மாஸ்டராக வேலை செய்கிறார். இவரது உறவினரான திருப்போரூர் சதீஷ், 31, நேற்று முன்தினம் ஓட்டலுக்கு வந்து, சங்கரிடம் பேசியுள்ளார்.அப்போது முனியம்மா, ஓட்டலில் உள்ள சுவாமி படத்தின் பின்புறம் நான்கு சவரன் தங்க செயின், ஒரு லட்சம் ரூபாய் வைத்து குளிக்க சென்றார்.இதை கவனித்த சங்கர், சதீஷ் ஆகியோர் பணம், நகையை திருடிச் சென்றனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.மனைவி குத்தி கொலைநகரி: சித்துார் மாவட்டம், மதனப்பள்ளி டவுன் தேக்குப்பேட்டையைச் சேர்ந்தவர் லோகேஷ், 35. இவரது மனைவி காயத்ரி, 30 அதே பகுதி தனியார் பள்ளியில் ஆசிரியை. இவருக்கு அதே பகுதி இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி மீது சந்தேகமடைந்த லோகேஷ், நேற்று முன்தினம் இரவு, காயத்ரியிடம் தகராறு செய்து, காய்கறி அறுக்கும் கத்தியால் அவரை குத்தி கொலை செய்தார். சடலத்தை கைப்பற்றிய மதனப்பள்ளி போலீசார், தலைமறைவான லோகேஷை தேடுகின்றனர்.'போக்சோ'வில் இளைஞர் கைதுநகரி: சித்துார் மாவட்டம், வரதய்யபாளையம் பகுதியில், 13 வயதான சிறுமியை, அதே பகுதி இருக்குளம் காலனியைச் சேர்ந்த சந்திரன், 25, என்பவர் நேற்று, வயல்வெளியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.பாதிக்கப்பட்ட சிறுமி கூச்சல் போட்டதால், அவரது பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சந்திரனை பிடித்து, வரதய்யபாளையம் போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து சந்திரனை, 'போக்சோ' சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.கடலில் மூழ்கி வாலிபர் மரணம்மாமல்லபுரம்: மாமல்லபுரம், கோவளம் சாலை பகுதி கடற்கரையில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, வாலிபரின் உடல் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். விழுப்புரம் மாவட்டம் கேதார் பகுதி, மேகநாதன் மகன் தமிழ்வாணன், 23, என்பதும், சென்னையில் தனியார் கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்ததும் விசாரணையில் தெரிந்தது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X