பயணியிடம் பறிமுதல் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
பயணியிடம் பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
06:13

காஞ்சிபுரம்-காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுரைக்கு, 10 கிலோ கஞ்சா கடத்தி செல்ல இருந்தவரை, போலீசார் கைது செய்தனர்.காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று அதிகாலை 3:30 மணிக்கு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு பைகளுடன் சந்தேகத்திற்கிடமாக ஒருவர் நின்றிருந்தார். அவரை நோக்கி போலீசார் சென்றதும், அருகேயிருந்த ஒரு பஸ்சில் ஏறி உட்கார்ந்து கொண்டார்.பஸ்சில் ஏறிய போலீசார், அவரை பிடித்து விசாரித்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒச்சியப்பன், 48, என்பதும், ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து, 10 கிலோ கஞ்சா பொட்டலங்களை எடுத்து வந்ததும் தெரிந்தது. மேலும், கஞ்சாவை மதுரைக்கு எடுத்து செல்வதற்காக, திருச்சி பஸ்சில் ஏறியதும் தெரியவந்தது. சிவ காஞ்சி போலீசார், அவரை கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X