அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்: 40 ஊராட்சிகள் தேர்வு | தேனி செய்திகள் | Dinamalar
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம்: 40 ஊராட்சிகள் தேர்வு
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
06:49

தமிழக அரசின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்திற்கு மாவட்டத்தில் 8 ஒன்றியத்தில் 40 ஊராட்சிகள் தேர்வாகியுள்ளன. இங்குள்ள தரிசு நிலங்களை விவசாய நிலமாக மாற்றப்படும். ஒரு தொகுப்புக்கு 10 முதல் 35 ஏக்கர் மேம்படுத்தப்படும். தொகுப்பில் 8 விவசாயிகள் இருப்பர். நிலத்தில் விவசாயம் செய்வது குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனையுடன் விதை, நாற்றுகள் வழங்கி நிலப்பரப்பை அதிகரிப்பது நோக்கமாகும். 28 தொகுப்பில் 570 ஏக்கர் கண்டறியப்பட்டுள்ளது.



தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாண்டி கூறுகையில், '' தேர்வாகியுள்ள 40 ஊராட்சிகளில் வேளாண், தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமித்து சர்வே நடக்கிறது. இதன்பின் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு வசதிகள் செய்து கொடுத்து 5 ஆண்டுகளில் 130 கிராம ஊராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்'' என்றார்.



எந்தெந்த கிராம ஊராட்சிகள்



ஆண்டிபட்டி - ராமகிருஷ்ணாபுரம், சித்தார்பட்டி, பழையகோட்டை, கோத்தலுாத்து, கொத்தபட்டி. போடி - உப்புக்கோட்டை, டொம்புசேரி, கூழையனுார், கோடாங்கிபட்டி, அகமலை. சின்னமனுார் - சின்னஓவிலாபுரம், பூலானந்தபுரம், கன்னிசேர்வைபட்டி, புலிக்குத்தி, வேப்பம்பட்டி. கம்பம்- குள்ளப்பகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாகமுத்தன்பட்டி, ஆங்கூர் பாளையம், நாராயணத்தேவன்பட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளது.



க.மயிலாடும்பாறை- ஆத்தாங்கரைப்பட்டி, எட்டப்பராஜபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை, பெரியகுளம்- ஜெயமங்கலம், சில்வார்பட்டி, டி.வாடிப்பட்டி, முதலக்கம்பட்டி, குள்ளப் புரம் தேனி- ஸ்ரீரெங்கபுரம், கோட்டூர், சீலையம்பட்டி, தப்புக்குண்டு, வெங்கடாஜலபுரம். உத்தமபாளையம் - கோகிலாபுரம், உ.அம்மாபட்டி, ராயப்பன்பட்டி, ராமசாமிநாயக்கன்பட்டி, மல்லிங்காபுரம் ஆகிய ஊராட்சிகள் தேர்வாகியுள்ளன.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X