சேலம்: சேலம் மண்டல கோவில்களில் தல மரக்கன்று நடுவதற்கான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சேலம் மாவட்டத்துக்கு, 2,500, தர்மபுரி மாவட்டத்துக்கு, 2,500 என, 5,000 மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. அந்தந்த கோவில்களின் தல மரங்களாக, மா, புன்னை, வில்வம், செண்பகம், மருதம், மகிழ், ஆல், அரசம், அத்தி, கடம்பம், நெல்லி, பலா, வேப்பம் ஆகியவை உள்ளன. இத்தகையை மரக்கன்றுகளை வாங்கி, கோவிலில் உள்ள இடங்களில் அடுத்த வாரம் நடப்படும்' என்றனர்.