மிரட்டும் மருமகள் மீது போலீசில் மாமியார் புகார் | சென்னை செய்திகள் | Dinamalar
மிரட்டும் மருமகள் மீது போலீசில் மாமியார் புகார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
22:50

மதுரவாயல் : வேறு நபருடன் திருமணம் செய்து கொண்டு, மாமியாரை மிரட்டி வரும் மருமகள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 65. இவரது கணவர், 14 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். ராஜேஸ்வரிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி, தன் வீட்டின் கீழ்ப் பகுதியில் வசிக்கிறார்.மகன், 2019 பிப்., மாதம் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மனைவியான ரம்யா, 30, மாமியாரின் வீட்டில் வசித்து வருகிறார்.



ரம்யாவுக்கு, 15 வயதில் மகனும், 12 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், ரம்யா வேறு ஒரு நபரை திருமணம் செய்துகொண்டு, ராஜேஸ்வரி வீட்டிலேயே குடும்பம் நடத்தப் போவதாக மிரட்டியுள்ளார்.இது குறித்து மாமியார் ராஜேஸ்வரி, மதுரவாயல் காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்தார். புகாரின்படி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X