தாம்பரம் - கூடுவாஞ்சேரி 3வது பாதை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் | சென்னை செய்திகள் | Dinamalar
தாம்பரம் - கூடுவாஞ்சேரி 3வது பாதை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

17 செப்
2021
22:52

சென்னை : தாம்பரம் - செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டு வரும் மூன்றாவது அகல ரயில் பாதையில் நேற்று ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது.



தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, 256 கோடி ரூபாய் செலவில், 30 கி.மீ., மூன்றாவது புதிய அகல ரயில் பாதை பணி 2016ல் துவங்கி நடந்து வருகிறது.ஐந்தாண்டுகள்...ஒன்றரை ஆண்டுகளில் பணி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஐந்தாண்டுகள் ஆகியும் இன்னும் இப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.



இப்பாதையில், தாம்பரம், பெருங்களத்துார், வண்டலுார், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்துார், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், பரனுார், செங்கல்பட்டு என 11 நிலையங்கள் உள்ளன.செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையே மட்டும் பாதை பணி முடிந்து, இவ்வாண்டு இரண்டு கட்டங்களாக, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி சோதனை நடத்தி, பயணியர் ரயில் இயக்க சான்றளிக்கப்பட்டது.



இந்நிலையில், நேற்று தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி வரை முதல்கட்டமாக, ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்தது. 100 கி.மீ., வேகத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.விரைவில், பெட்டிகள் இணைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



வாய்ப்பு




அதன்பின், ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர், அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்தி, பாதுகாப்பு சான்றளித்த பின், இப்பாதையில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும்.இப்பாதையில், ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டால், தாம்பரம் - செங்கல்பட்டு புறநகர் மின்சார ரயில் பாதையில், கூடுதல் ரயில்கள் இயக்க வாய்ப்புஉள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X