குழவி கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றவர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2021
22:52

ஐஸ்ஹவுஸ் : குடும்ப தகராறில், மனைவியின் தலையில் குழவி கல்லைப் போட்டு கொடூரமாக கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.



ராயப்பேட்டை கோயா அருணகிரி முதல் தெருவைச் சேர்ந்தவர் கனிமொழி, 22. இவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி 40, என்பவருக்கும் 2015ல் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.



இதில் ஆத்திரமடைந்த சுப்பிரமணி, மனைவியின் தலையில் குழவி கல்லைப் போட்டு, கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பினார்.சத்தம் கேட்டு ஓடி வந்த கனிமொழியின் சகோதரர் கந்தவேல், ரத்த வெள்ளத்தில் கிடந்த சகோதரியை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.அங்கு கனிமொழியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.



பின், கந்தவேல் அளித்த புகாரின்படி, ஐஸ்ஹவுஸ் போலீசார் தலைமறைவான சுப்பிரமணியை, நேற்று காலை கைது செய்தனர்.மனைவியின் தலையில் கல்லை போட்டு, கணவர் கொடூரமாக கொன்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X