செஞ்சி : செஞ்சி, வல்லம், மேல்மலையனுார் ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள தி.மு.க., வினருக்கான நேர்காணல் நேற்று செஞ்சியில் நடந்தது.
செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்களில் தலா 24 ஒன்றிய கவுன்சிலர், வல்லத்தில் 21 ஒன்றிய கவுன்சிலர் என 69 ஒன்றிய கவுன்சிலர், மூன்று ஒன்றியங்களிலும் தலா 2 மாவட்ட கவுன்சிலர் என 6 மாவட்ட கவுன்சிலர் என மொத்தம் 75 பதவிகளுக்கு நேர்காணல் நடந்தது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மஸ்தான் நேர்காணல் நடத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தலைமை தீர்மானக்குழு உறுப்பினர் சிவா, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன், நெடுஞ்செழியன், சுப்ரமணியன், அண்ணாதுரை, துரை உடன் இருந்தனர்.