பா.ம.க., வீரவணக்க நாள் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பா.ம.க., வீரவணக்க நாள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
00:10

விக்கிரவாண்டி : விழுப்புரம் மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.

விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு, பனையபுரம் பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிக்கு, மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச் செயலாளர் தங்கஜோதி, மாநில துணைத் தலைவர் அன்புமணி, துணை அமைப்புச் செயலாளர் பழனிவேலு முன்னிலை வகித்தனர். தொகுதி செயலாளர் சீனுவாசன் வரவேற்றார்.நிகழ்ச்சியில், இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். பசுமை தாயக மாவட்ட செயலாளர் தீனவேலு, மாவட்ட நிர்வாகிகள் முருகன், செல்வகுமார், கமலக்கண்ணன், மணிமாறன், செல்வராசு, சசிக்குமார், விழுப்புரம் நகர தலைவர் போஜ ராஜன், மாவட்ட பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ராமர், விழுப்புரம் தொகுதி செயலாளர் சிவக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேலு, சம்பத், வேல்முருகன், கார்த்திகேயன், ஏழுமலை உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X