கிரைம் செய்திகள்... | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கிரைம் செய்திகள்...
Added : செப் 18, 2021 | |
Advertisement
 

பைக் மோதி வாலிபர் பலி

மரக்காணம்: கே.என்.பாளையத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமன், 28; இவர், மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் சென்றார். பிளாரிமேடு அருகே எதிரே வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. இதில் ராமன் சம்பவ இடத்திலேயே இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

டிராக்டர் திருடியவர் கைது

சங்கராபுரம்: வரகூரைச் சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவரது, டிராக்டர் மற்றும் டிப்பர் கடந்த 7ம் தேதி முதல் காணவில்லை. டேவிட்ராஜ் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து டிராக்டர், டிப்பரைத் திருடிய, விரியூரைச் சேர்ந்த மணி மகன் ஆரோக்யராஜ், 32; என்பவரை கைது செய்து டிராக்டர், டிப்பரை பறிமுதல் செய்தனர்.கீழே விழுந்தவர் சாவுசங்கராபுரம்: மோட்டாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன், 60; இவர், சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். கடந்த 14ம் தேதி வீட்டில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர் தவறி கீழே விழுந்தார். உடன், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார். சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செயின் பறித்த நபர் கைது

வானுார்: கிளயனுார் அடுத்த கோவடியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி பாஞ்சாலி, 45; இவர், நேற்று முன்தினம் அதே பகுதியில் நடந்த கோவில் கும்பாபிேஷக விழாவில் சுவாமி தரிசனம் செய்தார். கூட்டத்தில் பாஞ்சாலியின் 5 சவரன் செயினை ஒருவர் பறித்துச் சென்றார். உடன் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து, கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், சென்னை, எண்ணுார் கமலம்மாள் நகரைச் சேர்ந்த குமரவேல், 49; என்பதும், அவருடன் வந்த சிலர் நகையை எடுத்துச்சென்றதும் தெரிய வந்தது. உடன் குமரவேலை கைது செய்து, அவருடன் வந்து தப்பிய நபர்களை தேடி வருகின்றனர்.

மருத்துவமனை சேதம்: இருவருக்கு வலை

விழுப்புரம்: மகாராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் புஷ்பலதா, மாரியம்மாள். இவர்கள், கடந்த 15ம் தேதி பணியில் இருந்தபோது, பைக்கில் அடையாளம் தெரியாத 2 பேர், சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு கூறியதால் செவிலியர்கள் இருவரையும், அந்த நபர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். பின், சுகாதார நிலைய ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். புகாரின்பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

பஸ் மோதி பைக்கில் வந்தவர் பலி

கண்டாச்சிபுரம்: மழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 40; அதே பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார், 38; இருவரும் நேற்று மதியம் விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் பேஷன் புரோ பைக்கில் வந்தனர். பைக்கை ஆறுமுகம் ஓட்டினார். மழவந்தாங்கல் குறுக்கு ரோடு அருகே மதியம் 2:30 மணியளவில் வந்தபோது, புதுச்சேரியில் இருந்து பெங்களூரு சென்ற புதுச்சேரி அரசு பஸ் பைக் மீது மோதியது. இதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த அய்யனார் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.இதற்கிடையே, விபத்தில் சிக்கிய இருவரிடமிருந்தும் எடுத்த 9,220 ரூபாயை விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்களிடம் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ரவி மற்றும் அவசரகால மருத்துவ நிபுணர் சுரேஷ் முருகன் ஆகியோர் ஒப்படைத்தனர்.

காணாமல் போனவர் சடலமாக மீட்பு

உளுந்துார்பேட்டை: சேலம் மெயின் ரோடு அருகே உள்ள சுடுகாட்டிற்கு எதிரே அழுகிய நிலையில் ஒருவர் துாக்கிட்டு இறந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உளுந்துார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் எல்லை கிராமம் பகுதியைச் சேர்ந்த கலியன் மகன் கோவிந்தன், 30; இவர், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கொடுத்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்ததும் தெரியவந்தது. உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பெண் மானபங்கம்: ஒருவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: கண்ணாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் ராம்குமார், 29; வெல்டர். இவர், நேற்று மதியம் அப்பகுதியில் தனியாக இருந்த திருமணமான பெண்ணிடம் அத்துமீறி நடந்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து ராம்குமாரை கைது செய்தனர்.

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது 19 வயது மகள் கடந்த 15ம் தேதி கல்லுாரிக்குச் செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.மது பாட்டில் விற்றவர் கைது;திருவெண்ணெய்நல்லுார்: பாவந்துார் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் குருபரன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே ஊரைச் சேர்ந்த மைக்கேல் ராஜ் 34; என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X