பட்டா மாற்ற ரூ.7,000 கணவருடன் சர்வேயர் கைது | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பட்டா மாற்ற ரூ.7,000 கணவருடன் சர்வேயர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
01:12

விழுப்புரம்:பட்டா மாற்றம் செய்ய 7,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் சர்வேயர் மற்றும் அவரது கணவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.



விழுப்புரம் அடுத்த அரும்புலியைச் சேர்ந்தவர் கருணாகரன், 35; கட்டட தொழிலாளி. இவர், தன் பெயரிலும், மனைவி பெயரிலும் 4 சென்ட் வீட்டுமனை வாங்கினார்.மனையை பட்டா பெயர் மாற்றம் செய்ய, விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு, சர்வேயராக பணிபுரியும் ஸ்ரீதேவி, 48, என்பவர் 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.


இது குறித்து கருணாகரன், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். கருணாகரன், ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று பணத்தை வழங்கினார். பணத்தை வாங்கிய ஸ்ரீதேவி, தன் கணவர் வெற்றிவேலிடம் கொடுத்தார்.மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஸ்ரீதேவி, வெற்றிவேல் இருவரையும் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X