அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் மறியல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி முன் விவசாயிகள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
01:18

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் விலைப்பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர்.



அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அதிக விளை பொருட்கள் ஏலத்திற்கு வரும் கமிட்டியாக உள்ளது. இங்கு 19க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 6 பேர் மட்டுமே உள்ளனர். கண்காணிப்பாளர் இல்லை. கண்காணிப்பாளர் பணியை சூப்பர்வைசர்கள் முகுந்தன், சுரேஷ்ராஜன் செய்து வருகின்றனர்.நேற்று முகுந்தன் பணிக்கு வராத நிலையில், சுரேஷ்ராஜன் மட்டும் வந்திருந்தார். பணிச்சுமை காரணமாக தன்னால் விலைப் பட்டியலை இறுதி செய்ய முடியாது என புறக்கணித்துள்ளார்.



40க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விலையை குறித்துக் கொடுத்த நிலையில், அதனை இறுதி செய்யவில்லை.இதனால் விலை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. மதியம் 12:00 மணி வரை காத்திருந்த விவசாயிகள் மார்க்கெட் கமிட்டி முன், திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அரகண்டநல்லுார் பயிற்சி டி.எஸ்.பி., நமச்சிவாயம், சப் இன்ஸ்பெக்டர் புனிதவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விவசாயிகளை கலைந்து போகச் செய்தனர். இதனால், 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.பின்னர் கண்டாச்சிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன், செயலாளர் கென்னடி, கமிட்டி ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து பட்டியல் இறுதி செய்யப்பட்டு மதியம் 1:20 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X