நண்பர் வழங்கிய 10 ரூபாய் நோட்டை 20 ஆண்டுகளாக பாதுகாத்த ராணுவ வீரர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
01:29

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் நண்பர் கொடுத்த பத்து ரூபாய் நோட்டை இருபது ஆண்டுகளாக பாதுகாத்து அவரிடமே திருப்பி வழங்கியராணுவ வீரரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சுயநலம், தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற மனநிலையில் தான் இன்றைய உலகின் வாழ்க்கை சக்கரம் செல்கிறது. விட்டுக்கொடுத்தல், நட்பு பாராட்டுதல், அன்பு, இரக்க குணம் வறண்டு போய் விட்டது.இது போன்ற சூழலில் உன்னதமான நட்பின் பெருமையை பறைசாற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இருநட்பூக்களின் செயல் மெய்சிலிர்க்க செய்கிறது.



ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையைசேர்ந்தவர் ஆண்டர்சன் ரூபன் 44. ராமநாதபுரம் அருகே வாலாந்தரவையை சேர்ந்தவர் முனியசாமி 44.தற்போது ராமநாதபுரம் நாடார் தெருவில் மெடிக்கல் நடத்தி வருகிறார்ஆண்டர்சன் ரூபன். இருவரும் 20 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் உள்ள மருந்தகத்தில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர். அப்போது, இருவரும் நண்பர்களாக பழகினர்.இருவருக்கும் இடையே எந்த ஒளிவு மறைவும் இன்றி பழகி வந்துள்ளனர்.



முனியசாமிக்கு ராணுவ வீரர் ஆக வேண்டும் என்பது ஆசை.அதற்காக முயற்சித்தவர் 2000ல் சி.ஆர்.பி.எப்., வீரராக தேர்வு பெற்றார். காஷ்மீருக்கு பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் நண்பர்கள் இருவரும் பிரியாவிடை பெற்றனர். ராமநாதபுரம் ரயில் நிலையம் வந்து முனியசாமியை வழியனுப்பிய ஆண்டர்சன் ரூபன், தனது நினைவாக ஒரு பத்து ரூபாய் நோட்டில் தனது கையெழுத்து, தேதியை எழுதி முனியசாமியிடம் கொடுத்துள்ளார்.



ஆத்ம நண்பரான முனியசாமி அந்த பத்து ரூபாயை இதுநாள் வரை தனது பயிற்சி முகாமில் பாதுகாத்து வந்துள்ளார்.முனியசாமி கூறுகையில், பத்து ரூபாயில் நான் பார்த்தது நண்பரின் பாசத்தை மட்டுமே. அதனால் தான் எனது பணி நிறைவு பெற்றதும் ராமநாதபுரம் வந்தவுடன் ஆக.1ல் நண்பர் ரூபனை பார்க்க சென்றேன். அப்போது, 21 ஆண்டுகளுக்கு முன் அவர் பெயர் எழுதி கையெழுத்திட்டு கொடுத்த பத்து ரூபாயை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தேன், என்றார்.



ஆண்டர்சன் ரூபன் கூறுகையில் ,அவர் பணி நிமித்தமாக காஷ்மீர், ஒடிசா என நாடு முழுவதும் பணியாற்றிய போதும், நான் கையெழுத்திட்ட பத்து ரூபாய் நோட்டை, அதன் பின் பகுதியில் அவர் கையெழுத்திட்டு என்னிடம் வழங்கினார். நண்பர் முனியசாமியை கட்டி அணைத்துக் கொண்டேன். இந்த பத்து ரூபாய் பத்திரமாக அவரிடமே இருக்க வேண்டும். அவரிடமே அதை கொடுக்க உள்ளேன், என்றார். நல்ல நட்புக்கு இலக்கணமான இவர்களை வாழ்த்துவோம். 82203 90489.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X