கடைகளுக்கு சீல் வைப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
கடைகளுக்கு சீல் வைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:10

விழுப்புரம் : விழுப்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கட்டடத்திற்கு வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.



விழுப்புரம் திரு.வி.க., வீதியில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தனியார் பயிற்சி பள்ளி உள்ளது. இந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளாக மாத வாடகை கட்டண தொகையாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இந்த தொகையை கடந்த 15ம் தேதிக்குள் செலுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாடகை பாக்கியை செலுத்தாததால் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் பொருட்களை கட்டடத்திற்குள் இருந்து வெளியே எடுத்து வைத்து சீல் வைத்தனர். இதேபோன்று பெரியார் சிலை அருகே வைகுண்டவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கடைக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X