பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய மர்ம நபர்கள் உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:20


உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய நபர்களை பொதுமக்கள் விரட்டி பிடிக்க முயன்றதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை, பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன், 48; பத்திர எழுத்தராக உள்ளார்.



இவரது தாய் காசியம்மாள், விஜயமாநகரம் பகுதியில் இறந்ததால் ஈமச்சடங்கில் பங்கேற்க குடும்பத்தினருடன் நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டை பூட்டிச் சென்றார்.மதியம் 3:00 மணியளவில் மர்ம நபர்கள் இருவர், அன்பழகன் வீட்டின் உள்ளே இருந்து மர்ம நபர்கள் இருவர் வந்ததை அப்பகுதி மக்கள் பார்த்தனர். உடன் அவர்களைப் பிடிக்க முயன்றபோது, அந்த நபர்கள் கத்தியை காட்டியும், கல்லால் தாக்கவும் முயன்றனர். இருப்பினும் பிடிக்க முயன்றபோது, அவர்கள் கொண்டு வந்த கைபை மற்றும், பல்சர் பைக்கையும் விட்டு விட்டு தப்பியோடினார்.



ஆசாமிகள் விட்டுச் சென்ற கைப்பையில் அன்பழகன் வீட்டில் இருந்து திருடி வந்த 60 ஆயிரம் ரூபாய் இருந்தது.இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில், அன்பழகன் வீட்டில் திருடி தப்பியோடிய நபர்கள் விருத்தாசலம் சாலையில் நின்றிருந்த பைக்கை திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களைத் தேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X