போத்தனூரில் ரயில் முனையம் உருவானால்... வழி பிறக்கும்! கொங்கு மண்டல மக்களின் கனவு நனவாகும் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
போத்தனூரில் ரயில் முனையம் உருவானால்... வழி பிறக்கும்! கொங்கு மண்டல மக்களின் கனவு நனவாகும்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

18 செப்
2021
02:57
பதிவு செய்த நாள்
செப் 18,2021 02:56

கோவை:கோவையின் இரண்டாவது ரயில் முனையமாக, போத்தனுார் ஸ்டேஷனை மாற்றினால், அனைத்து நகரங்களுக்கும் செல்ல வழிபிறகும்; ரயில்வேக்கும் வருவாய் அதிகரிக்கும்.தொழில், கல்வி, மருத்துவம்,மக்கள் தொகை, போக்குவரத்தில் கோவை நகரம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.



சென்னைக்கு அடுத்து சேலம் கோட்டத்தில், ஆண்டுக்கு, 200 கோடிக்கு ரூபாயக்கு மேல் அதிக வருவாய் ஈட்டும், 'ஏ1' அந்தஸ்துடன் கோவை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.ஆனால், கோவையில் இருந்து ராமேஸ்வரம், துாத்துக்குடி, மதுரைக்கு பழைய ரயில்களை மீண்டும் இயக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை தெற்கு ரயில்வே இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறது. புதிய ரயில்கள் இயக்குவது, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக, இட வசதியை காரணம் காட்டி தட்டிக்கழித்து வருகிறது.



இருந்தாலும், கோவையின் தேவையை ரயில் பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதில் ஒன்றாக, போத்தனுார் ஸ்டேஷனை, இரண்டாவது ரயில் முனையமாக மாற்றினால், கொங்கு மண்டலத்தில் இருந்து அனைத்து நகரங்களுக்கு செல்ல வழிபிறக்கும் என்கிற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.



கொங்கு மண்டல ரயில் பயணிகள் கூறியதாவது:கேரளாவுக்கும், தென்மாவட்டங்களுக்கும் நுழைவாயில் போத்தனுார் ஸ்டேஷன். கடந்த, 2013ல் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை, 'எஸ் அண்ட் டி' பணிமனைக்கான ஸ்டோர் என மேம்பாட்டு பணிகள் பல திட்டமிடப்பட்டது; ஆனால், கைவிடப்பட்டது.தற்போது, ஸ்டேஷன் அருகே, வெள்ளலுார் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட்,கோவை நகரின் மெட்ரோ ரயில் திட்டம் வெள்ளலுார் வரை நடைமுறைப்படுத்துவது சிறப்பம்சம். போத்தனுார் ஸ்டேஷனை, சென்னை எக்மோர் போல்முனையமாக மாற்றினால், தமிழக நகரங்களுக்கு வழிபிறக்கும். தெற்கு ரயில்வேக்கும் அதிக வருவாய்கிடைக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



மக்களின் குரலாக...கோவை எம்.பி., நடராஜனிடம் கேட்டபோது,''ரயில்வேக்கு சொந்தமாக, அதிக இடமுள்ள போத்தனுார்ஸ்டேஷனை முனையமாக மாற்றும் கோரிக்கையை, கோவை மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பேன். ரயில்வே அமைச்சரிடமும், தெற்கு ரயில்வே பொது மேலாளரிடமும் இதுகுறித்து நேரில் கோரிக்கை மனு அளிப்பேன்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X