ரிஷிவந்தியம் அருகே சமத்துவபுரம் வீடுகள் கட்ட இடம் ஆய்வு .அளவீடு முடிந்ததும் பணி துவங்கும் என அதிகாரிகள் தகவல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:58

ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி ஊராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் சமத்துவபுரம் கட்டுவதற்காக, வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் இரண்டாம் கட்ட ஆய்வு மேற்கொண்டனர்.



தமிழகத்தில் கடந்த 1998ம் ஆண்டு தி.மு.க., ஆட்சியின்போது, அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதியால் சமத்துவபுரம் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில், அனைத்து ஜாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்பு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டப்பட்டது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தாலுகாக்களிலும் அரசுக்கு சொந்தமான நிலத்தை தேர்வு செய்து, தலா 3 சென்ட் பரப்பளவில் ஒரே மாதிரியான வடிவமைப்பில் 100 வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 40 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவீதம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 சதவீதம், இதர பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 சதவீதம் என்ற விகித அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.



இந்த குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி, வணிக வளாகம், விளையாட்டு மைதானங்கள், பூங்காக்கள் உள்ளிட்டவை இடம் பெறும்.கடந்த 1996 - 2001 மற்றும் 2006-2011ம் ஆண்டுகளில் தி.மு.க., ஆட்சி காலத்தில், தமிழகம் முழுதும் 240 சமத்துவபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. தொடர்ந்து 2011- 2021 வரை அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் செயலிழந்த இத்திட்டம், தற்போது தி.மு.க., ஆட்சியில் மீண்டும் புத்துயிர் பெறத் துவங்கியுள்ளது.நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் பழைய சமத்துவபுர குடியிருப்புகள் சீரமைப்பதுடன், புதிய சமத்துவபுரங்கள் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.இதையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, சூளாங்குறிச்சி ஊராட்சி மணிமுக்தா அணைக்கு அருகே தீர்வை ஏற்படாத தரிசு நிலம், 5 எக்டேர் 79 ஏர்ஸ் (14 ஏக்கர் 30 சென்ட்) பரப்பளவில் சமத்துவபுரம் வீடுகள் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.



இங்கு வீடுகள் கட்டுவதற்கான இரண்டாம் கட்ட ஆய்வு பணிகள் நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் பி.டி.ஓ., ஆறுமுகம், சூளாங்குறிச்சி வி.ஏ.ஓ., மணிகண்டன், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரன், கிராம உதவியாளர் தனபால் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பாவந்துாரில் உள்ள அரசுக்கு சொந்தமான இடமும் பரிசீலனையில் உள்ளது. இந்த 2 இடங்களையும் முழுமையாக அளவீடு செய்து, வீடுகள் அமையும் வடிவம், தெருக்களின் எண்ணிக்கை, நீர்தேக்க தொட்டி, பூங்கா, விளையாட்டு மைதானத்திற்கு தேவையான இடங்கள் கணக்கீடு செய்த பின், கட்டுமானப் பணிகள் துவங்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்ட உதயத்திற்கு பிறகு கட்டப்படும் முதல் சமத்துவபுரம் என்பதால் ரிஷிவந்தியம் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X