அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேரலாம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் சேரலாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:59

கோவை:அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடப்பு கல்வியாண்டில் டிப்ளமோ படிப்புகளுக்கான முதல்கட்ட சேர்க்கை முடிந்துள்ள நிலையில், மீதமுள்ள காலியிடங்களுக்கு நேரடி சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் சேர, பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கான இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிக்க தவறியவர்கள், 30ம் தேதி வரை நேரடியாக விண்ணப்பிக்கலாம். கட்டணமாக, 150 ரூபாய் செலுத்த வேண்டும்; எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.ஆண்டுக்கு, 2,252ரூபாய் மட்டுமே கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வி உதவித்தொகை, இலவச பஸ் பாஸ், லேப்டாப் போன்றவை மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. விபரங்களுக்கு, 0422-2573218 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இப்படிப்புக்கு, வயது உச்ச வரம்பு இல்லை என்பதால், திருமணம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உயர்கல்வி தொடர முடியாதவர்கள் இதில் சேர்ந்து கல்வியை தொடரலாம்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X