நாளை கடைகள், நிறுவனங்கள் இயங்க தடை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2021
02:59

கோவை;கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்த, நாளை (ஞாயிற்றுக்கிழமை), அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற கடைகள், நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல் மற்றும் பேக்கரிகளில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாளை (ஞாயிற்றுக்கிழமை), கோவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. பால், மருந்தகம், மளிகை கடைகள் மட்டுமே செயல்படலாம். ஓட்டல் மற்றும் பேக்கரிகளில், காலை, 8:00 முதல் இரவு, 10:00 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.இறைச்சி கடைகள் செயல்பட அனுமதியில்லை என்பதால், இன்று (சனிக்கிழமை) மார்க்கெட்டுகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் திரண்டால், தொற்று பரவுவதற்கு வாய்ப்பு உருவாகி விடும். அதனால், தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, உக்கடம் சில்லறை மீன் மார்க்கெட்டில், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அதன்பின், கலெக்டர் சமீரன் கூறியதாவது:நமது மாவட்டத்தில், கடந்த, 15 நாட்களில் கொரோனா தொற்று பரவல், 2 சதவீதமாக இருப்பதால், ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பால், மருந்தகம், காய்கறி, மளிகை கடைகள், தவிர மற்ற கடைகள், சந்தைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவையில் இதுவரை, 83 சதவீதத்தினர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். வணிக வளாகங்கள், துணிக்கடைகள், இதர நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கேரள எல்லையில், 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மருத்துவம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கேரளாவில் இருந்து வருபவர்கள், 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆ.டி.பி.சி.ஆர்., பரிசோதனை சான்று அல்லது இரண்டு தவணை செலுத்திக்கொண்டதற்கான சான்று வைந்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கேரள மாநிலத்தில் இருந்து வரும் மாணவர்கள் மூலம் தொற்று பரவுவதை தவிர்க்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கல்லுாரி நிர்வாகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.அப்போது, ஊரக வளர்ச்சி திட்ட முகமை இயக்குனர் கவிதா, உதவி கலெக்டர் (பயிற்சி) சரண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X