கோவை:கோவை - சத்தி சாலையில் உள்ள அய்யா வைகுண்ட சிவபதி தேர்த்திருவிழாவைெயாட்டி, கொடியேற்றம் நேற்று நடந்தது.கொடியேற்று விழா நேற்று காலை, 6:30 மணிக்கு நடந்தது. 7:30க்கு உகப்படிப்பு, அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று காலை, 6:00 மணிக்கு உகப்படிப்பு, பணிவிடை, பிற்பகல், 12:00 மணிக்கு உச்சிப்படிப்பு, இரவு, 7:30 மணிக்கு சிறப்பு புஷ்ப அலங்கார பணிவிடை, அய்யா மயில் வாகனத்தில் எழுந்தருளல் நடக்கிறது.