நோய் நெருங்காமல் இருக்க என்ன வழி? | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
நோய் நெருங்காமல் இருக்க என்ன வழி?
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
03:07

கோவை:வள்ளலார் வைத்தியசாலை சார்பில், 'மூன்றாவது அலையை எதிர்கொள்வது எப்படி' என்ற தலைப்பில், சன்மார்க்க சங்க அரங்கில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது; கோவை மாவட்ட சன்மார்க்க சங்க தலைவர் ராமதாஸ் தலைமை வகித்தார்.திருவொற்றியூர் ராமலிங்க சுவாமி மடாலயம் செல்வபூபதி பேசுகையில், ''கொரோனா என்ற பேரழிவு நோயை யாரும் எதிர்பார்க்கவில்லை. எந்த சூழ்நிலையிலும் நம் உணவு முறையை மாற்றக்கூடாது.உப்பு, புளி, காரம் குறைத்து, உண்ண வேண்டிய உணவை உண்டு, தவிர்க்க வேண்டிய உணவை ஒதுக்கினால் போதும்; நோய் நெருங்காது. இயற்கை உணவே சிறந்தது. அதன் மகத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். ஒழுக்கமான வாழ்க்கை முறை மற்றும் சுகாதாரமான பழக்க வழக்கங்கள் வழியாக, நோய் இல்லாத வாழ்க்கை வாழலாம்,''என்றார்.கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மாதா அமிர்தானந்தமயி மிஷன் மாத்ரு கிருபாமிருத சைதன்யா, ஈஷா பவுண்டேஷன் சுவாமி அபிபாதா உள்ளிட்ட பலர் பங்கேறற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X