சத்தி மெயின் ரோட்டில் டிஜிட்டல் போர்டால் ஆபத்து | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சத்தி மெயின் ரோட்டில் டிஜிட்டல் போர்டால் ஆபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
03:08

சரவணம்பட்டி:சரவணம்பட்டி மெயின் ரோட்டில், மாநகராட்சி அலுவலக வளாகத்துக்குள் டிஜிட்டல் விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது.சரவணம்பட்டி - சத்தி மெயின் ரோட்டில், மாநகராட்சி வரிவசூல் மையம் மற்றும் சுகாதார மைய அலுவலகம் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில், சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்களில் வருவோரின் கவனத்தை கவரும் வகையில், இந்த டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது.விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த டிஜிட்டல் போர்டில், கொரோனா தொற்று விழிப்புணர்வு வாசகங்கள் மட்டுமின்றி, வணிக நோக்கத்தோடு பல விளம்பரங்களும் காட்டப்படுகின்றன. சத்தி மெயின் ரோட்டில் இருந்து, பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்பி, விபத்தை ஏற்படுத்தி வரும் இந்த போர்டை அகற்ற வேண்டும்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X