கைத்தறி பொருட்கள் நகர்வலம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கைத்தறி பொருட்கள் நகர்வலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
03:49

பொள்ளாச்சி:ஈரோடு சென்னிமலையில் இருந்து கைத்தறி பொருட்கள் விற்பனைக்காக, ஊர் ஊராக வாகனங்கள் சென்று வருகின்றன. அதில், நேற்று பொள்ளாச்சிக்கு வாகனம் வந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் கயிறு வாரிய அலுவலகம் அருகில், கயிறு வாரிய மண்டல அலுவலர் பூபாலன் விற்பனையை துவக்கி வைத்தார். பெட்சீட், துண்டு, போர்வை, மிதியடிகள் விற்பனை செய்யப்பட்டன. மெத்தை விரிப்பு, போர்வை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது. 250 ரூபாய் முதல், 756 ரூபாய் வரை விற்கப்பட்டன.விற்பனையாளர்கள் கூறுகையில், 'கைத்தறி பொருட்கள் உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையிலும், உற்பத்தியாளர்கள், நேரடியாக பொதுமக்களை சந்தித்து விற்பனை செய்யும் நோக்கத்தில் தமிழக அரசு வாகனம் வழங்கியது.கொரோனா ஊரடங்கு காரணமாக பயன்படுத்தாமல் இருந்தோம். தற்போது, தளர்வு காரணமாக விற்பனை துவக்கி உள்ளோம். ஒரு நாளைக்கு ஒரு ஊர் சென்று விற்பனை செய்கிறோம்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X