வேளாண் களப்பணியாளர்களுக்குமகசூல் கணக்கெடுப்பு பயிற்சி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வேளாண் களப்பணியாளர்களுக்குமகசூல் கணக்கெடுப்பு பயிற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
23:00

ராமநாதபுரம்--ராமநாதபுரம் மாவட்ட புள்ளியியல்துறை, வேளாண்துறை சார்பில், பயிர் அறுவடை பரிசோதனை, மகசூல் எவ்வாறு கணக்கு எடுப்பது என்பது குறித்து வேளாண் களப்பணியாளர்களுக்கு புத்தாக்கப்பயிற்சி வழங்கப்பட்டது.



பயிற்சி முகாமில் மதுரை மண்டல புள்ளியியல்துறை இணை இயக்குனர் ஹரிஹரதாஸ், துணை இயக்குனர் ஜெய்சங்கர், வேளாண் இணை இயக்குனர் டாம்.பி.சைலேஸ் முன்னிலை வகித்தனர்.இதில், 11 வட்டாரத்தில் நடப்பாண்டு சம்பா சாகுபடி பணிகள் தொடங்கியுள்ளன. நெல்விளைச்சல் அறுவடை பணிகளை துல்லியமாக அறிவியல் பூர்வமாக அளவிட திடல்கள்அமைக்க வேண்டும். விளைச்சல் எவ்வாறு என்பது குறித்தும், வருவாய்துறை, வேளாண் அலுவலர் முன்னிலையில் அறுவடை பரிசோதனை மேற்கொண்டு மகசூல் குறித்து கணக்கிட்டு அதற்குரிய விண்ணப்பத்தை எவ்வாறு பூர்த்தி செய்வதுபற்றி பயிற்சி வழங்கப்பட்டது. வேளாண் துணை இயக்குனர் சேக் அப்துல்லா, அலுவலர்கள்உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X