இருவர் தற்கொலை | சென்னை செய்திகள் | Dinamalar
இருவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

18 செப்
2021
23:55

மாங்காடு : மாங்காடு அடுத்த பெரியபணிச்சேரியைச் சேர்ந்தவர் பிரசன்ன வெங்கடேசன், 27. நேற்று காலை துாக்கிட்டு தற்கொலை செய்தார்.



மாங்காடு போலீசாரின் விசாரணையில், பிரசன்ன வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு, தான் காதலித்த பெண்ணிடம், மொபைல் போனில் பேசியபோது தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தியடைந்தவர் இந்த முடிவு எடுத்திருக்கலாம் என தெரிய வந்தது.



இவர், கள்ளக்காதல் விவகாரத்தில், இரு குழந்தைகளை விஷம் கொடுத்து கொலை செய்த அபிராமியின் தம்பியாவார். மாங்காடு: மாங்காடு அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் இதயத் உசேன், 32. மனைவி பர்கித் பீவி, 30. தம்பதிக்கு ஓராண்டுக்கு முன் திருமணமானது. மனைவியிடம் பணம் கேட்டு, இதயத் உசேன் தொல்லை கொடுத்துள்ளார்.



இதனால் தாய் வீட்டிற்கு வந்த பர்கித் பீவி, கழிவு நீர் தொட்டியில் குதித்து தற்கொலை செய்தது, நேற்று காலை தெரிய வந்தது. மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X