பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள் | தேனி செய்திகள் | Dinamalar
பெருமாள் கோயில்களில் திரண்ட பக்தர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:01

தேனி-தேனி மாவட்டத்தில் புரட்டாசி முதல் வார சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்ப, பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.புரட்டாசி மாதப் பிறப்பின் முதல் சனிவாரத்தை யொட்டி அல்லிநகரம் வரதராஜ பெருமாள் கோயில், பெரியகுளம் ரோடு பெருமாள் கோயில், என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில், பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் உள்ள மூலவர், பிரகார பெருமாள் தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இதில் பக்தர்கள், பொது மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.கூடலுார்: கூத்தபெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் குறைவாக வந்தனர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X