போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்கு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
00:42

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள இடத்தை போலிஆவணம் மூலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுசெய்ததாக சார்பதிவாளர் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நிலஅபகரிப்பு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.



பரமக்குடி பேட்டைத்தெருவைச் சேர்ந்த ஞானசேகரன் மனைவி சசிகலா. ரூ.50 லட்சம் மதிப்புள்ள 1221 சதுரடி வீட்டை 2005 ல்வாங்கினார். ஆனால் தனது பெயரில் பட்டா வாங்கவில்லை.சிலர் போலி ஆவணங்களை பயன்படுத்திசார்பதிவாளர் அலுவலகத்தில் மீண்டும் பத்திரம் பதிவு செய்துள்ளதாகராமநாதபுரம் மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவில் சசிகலா புகார் அளித்தார்.



விசாரணையில் 1978 ல் ஜெனரல் பவர் கொடுத்ததை மறைத்து பரமக்குடியைச் சேர்ந்த பாண்டியம்மாள், ஞானசேகரன், எமனேஸ்வரம்குபேந்திரன், இளையான்குடி கோட்டையூர் மகேஸ்வரி, திருப்புவனம்சரஸ்வதி போலியான ஆவணங்களை உருவாக்கி 2018 ல் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திர பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சார்பதிவாளர் மற்றும் மேற்படி நபர்கள் மீது வழக்குபதிவு செய்து ராமநாதபுரம் நிலஅபகரிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X