திருமண மண்டபத்தில் பயங்கர தீ விபத்து வெடித்து சிதறிய மின் சாதன பொருட்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
01:38

வியாசர்பாடி : திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது, மண்டபத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை கண்டித்து, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.



சென்னை, பெரம்பூரைச் சேர்ந்த விஜய் - ஹேமமாலினி ஆகியோரது திருமணம், கீழ்ப்பாக்கம் கோவிலில் நேற்று முன்தினம் காலை நடந்தது.தொடர்ந்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி, வியாசர்பாடி, எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில், மணமக்கள் மற்றும் உறவினர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்நிலையில், இரவு, 9:00 மணியளவில், மண்டபத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் சாதன பொருட்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால், பெண்கள், குழந்தைகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த தீ விபத்தில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது.எதிர்பாராத நிகழ்வால், மணமகள் உள்ளிட்ட இருவர் மயங்கி விழுந்தனர். மூவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தீ விபத்து குறித்து, மண்டப உரிமையாளரிடம் கேட்டபோது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.



இதனால், ஆத்திரமடைந்த திருமண வீட்டார், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்; போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த, எம்.கே.பி.நகர் காவல் உதவி கமிஷனர் தமிழ்வாணன் மறியலில் ஈடுபட்டோரிடம் சமரசத்தில் ஈடுபட்டார். கூட்டத்தை கலைய அறிவுறுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில், மணமகனின் தந்தைக்கு காயம் ஏற்பட்டது. பின், சிறிது நேரத்தில் மறியலில் ஈடுபட்டோர் கலைந்தனர்.இது குறித்து, எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர். முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாகவே, தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்தது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X