மொபைல் போன் டவர் வைப்பதாக மோசடி | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
மொபைல் போன் டவர் வைப்பதாக மோசடி
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
04:59

விழுப்புரம் : வளவனுாரில் மொபைல் போன் டவர் வைப்பதாக கூறி பெண்ணிடம் 2.34 லட்சம் ரூபாயை ஏமாற்றிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



வானுாரைச் சேர்ந்தவர் மாரி மகள் தமிழ்ச்செல்வி, 34; இவர், வீட்டு மனையில் டவர் வைக்க முன்பணம் 50 லட்சம் ரூபாய் மற்றும் மாத வாடகையாக 40 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக, வந்த விளம்பரத்தைப் பார்த்து அந்த மொபைல் எண்ணில் கடந்த மார்ச் 9ம் தேதி பேசினார்.போனில் பேசிய நபர், உங்கள் நிலத்தில் டவர் வைக்க முன்பணம் 20 லட்சம் ரூபாய் வழங்குகிறோம்.



அதற்கு நீங்கள் 82 ஆயிரத்து 399 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.இந்த பணத்தை அவர், மர்ம நபர் கூறிய தேசியமயமாக்கபட்ட வங்கி கணக்கிற்கு கடந்த ஏப்ரல் மாதம் 'ஜிபே ஆப்' மூலம் அனுப்பியுள்ளார். இதையடுத்து, அந்த நபர், தமிழ்செல்வி வங்கி விபரங்களை பெற்று கொண்டு, அவரது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 922 ரூபாய் எடுத்ததுடன் மொத்தமாக 2 லட்சத்து 34 ஆயிரத்து 321 ரூபாய் ஏமாற்றியுள்ளார்.



தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X