காசிக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கம் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
காசிக்கு ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
05:13

கோவை;அயோத்தி, காசி உட்பட இடங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல, கோவை வழியாக ஐ.ஆர்.சி.டி.சி., சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், பாரத தரிசன சிறப்பு ரயில், சிறப்பு விமானங்கள் வாயிலாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். அவ்வகையில், அயோத்தி, காசி, அலகாபாத், கயா, பூரி, கோனார்க் ஆகிய இடங்களுக்கு, ஆன்மிக சுற்றுலா செல்ல நவ., 1ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.மதுரையில் இருந்து புறப்படும் ரயில், கோவை, ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, சென்னை வழியாக இயக்கப்படுகிறது. 11 நாட்கள் கொண்ட சுற்றுலாவுக்கு, நபர் ஒருவருக்கு, 11 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, கோவை ஐ.ஆர்.சி.டி.சி., அதிகாரிகளை, 82879 31965, 90031 40655 என்ற மொபைல் போன் எண்களிலும், www.irctctourism.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்புகொள்ளலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு பொது சேவை மையங்களிலும் முன்பதிவு செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X