கோவையில் வேளாண் அலுவலகம்: அரசு பணியாளர்கள் எதிர்பார்ப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கோவையில் வேளாண் அலுவலகம்: அரசு பணியாளர்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
05:31

கோவை;'விதைச்சான்று அலுவலகத்தை சென்னைக்கு மாற்றும் அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என, அரசு பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கோவை, தடாகம் ரோட்டில் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று அலுவலகம் உள்ளது. இது, சென்னைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து, கோவையில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில், விதைச்சான்று இயக்குனர் அலுவலகம் முன் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மாவட்ட தலைவர் சிங்காரவேல் பேசுகையில், ''விதைச்சான்று அலுவலகத்தை சென்னைக்கு மாற்றினால், கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விதை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர். அலுவலகத்தை மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X