தகுதி தேர்வில் விலக்கு கேட்டு காத்திருக்கும் ஆசிரியர்கள் | மதுரை செய்திகள் | Dinamalar
தகுதி தேர்வில் விலக்கு கேட்டு காத்திருக்கும் ஆசிரியர்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

19 செப்
2021
05:45

மதுரை:தமிழகத்தில் 2012ல் முறையாக பணி நியமனம் பெற்ற சிறுபான்மையற்ற பள்ளிஆசிரியர்கள் 1000 பேர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மனஉளைச்சலுடன் காத்திருக்கின்றனர்.மத்திய அரசு கட்டாய கல்வி சட்டம் 2010 ஆக.,23ல் அமல்படுத்திய பின் 'அரசு சிறுபான்மை பள்ளிகளுக்கு டி.இ.டி., கட்டாயம் இல்லை' என அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர் நியமனம் குறித்து அப்போதே தெரிவிக்காமல், தாமதமாக 'டி.இ.டி., கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.அதே நேரம் 2012 வரை தகுதி தேர்வு நிபந்தனையுடன் பணியேற்ற அரசு மற்றும் உதவிபெறும் சிறுபான்மை பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு, நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.இதே நடைமுறையை பின்பற்றி 'சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவர்' என 2019ல் அ.தி.மு.க., அரசு உறுதியளித்தது. இதுவரை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இதனால் எவ்வித பயன்களுமின்றி 9 ஆண்டுகளாக மனஉளைச்சலில் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கும் விலக்கு அளித்து வாழ்வாதாரம் காக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X