ரூ.30 லட்சம் கொள்ளை சம்பவம்: 4 பேர் கைது; 6 பேருக்கு வலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
05:48

மரக்காணம் : திண்டிவனம் அருகே காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது



செய்தனர்.சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த ராஜா, 32; வெள்ளரிக்காய் வியாபாரி. இவர் கடந்த 15ம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் உள்ள விவசாயிகளிடம் வெள்ளரிக்காய் பயிரிட பணம் பட்டுவாடா செய்ய ஸ்கார்பியோ காரில் 30 லட்சம் ரூபாயுடன் வந்தார்.காரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள் பெருமுக்கல் பஸ் நிறுத்தம் அருகே, காரை வழிமறித்து 30 லட்சம் ரூபாயை கத்தி முனையில் கொள்ளையடித்துச் சென்றனர்.இது குறித்து பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேகத்தின் பேரில் ராஜாவிடம் வேலை செய்துவரும் சேலம், சார்வாய் புதுாரைச் சேர்ந்த கந்தசாமி மகன் பன்னீர்செல்வம், 27; என்பவரிடம் விசாரணை நடத்தினர்.அதில், தெரியவந்ததாவது:ராஜா, 30 லட்சம் ரூபாயை காரில் எடுத்துச் செல்வதை பன்னீர்செல்வம், தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த மணிமாறன், 37; மனோஜ்குமார், 25; மற்றும் சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த செல்வகுமார், 41; ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.



மேலும், பணத்தை கொள்ளையடிக்க கார் குறித்த விபரம் மற்றும் எங்கு செல்கின்றனர் என்பதையும் தெரிவித்துள்ளார்.அதன் பின் செல்வகுமார் சென்னையைச் சேர்ந்த திலீபன் என்ற ரவுடி மூலம் பணம் எடுத்து வரும் காரின் விபரம் போட்டோக்களை அனுப்பியுள்ளார்.அதனையடுத்து 3 பைக்குகளில் 6 பேர் வந்து காரை மடக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.



இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, பன்னீர்செல்வம், மணிமாறன், மனோஜ்குமார், செல்வகுமார் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.மேலும், தலைமறைவாக உள்ள திலீபன் உட்பட 6 பேரை தேடி வருகின்றனர். இதில் செல்வகுமார் என்பவர் போலீஸ்காரர். திருட்டு வாகனங்களை வாங்கி விற்ற வழக்குகளில் சிக்கியதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X