ரவுடியின் மனைவி வெட்டிக் கொலை: கடலுாரில் பதற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2021
06:03

கடலுார் : கடலுாரில் ரவுடி கொலை வழக்கில் 'என் கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டவரின் மனைவியை கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.



பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கடலுார், சுப்ராயலு நகரைச் சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கன், 30; பிரபல ரவுடியான இவர் பிப்., 16ம் தேதி தலை துண்டித்து வெட்டி கொலை செய்யப்பட்டார். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் சதீஷ் என்பவரின் கொலைக்கு பழியாக வீரா கொல்லப்பட்டது தெரிந்தது.



வீரா கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான குப்பன்குளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன், 32; என்பவரை புதுப்பேட்டை, குடுமியான்குப்பம் மலட்டாறு அருகே போலீசார் 'என் கவுன்டரில்' சுட்டுக் கொன்றனர். இந்நிலையில் கிருஷ்ணன் மனைவி காந்திமதி, 27; நேற்றிரவு 9:00 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகசாமி என்பவருடன் மருத்துவமனைக்கு சென்று பைக்கில் வீடு திரும்பினார். சீனிவாசா நகர் அருகில் வந்த போது, பைக்கை வழிமறித்த 3 பேர், காந்திமதியை கத்தியால் தலை, கழுத்து, இடது கையில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் மயங்கிய அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.



பின், புதுச்சேரி ஜிப்மர் செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து கடலுார் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், வீரா கொலைக்கு பழியாக இச்சம்பவம் நடந்துள்ளது தெரிந்தது. போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். குப்பன்குளத்தில் பதற்றம் நிலவுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X