ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணி: விரைவில் துவங்க நடவடிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
03:41

தாம்பரம் : கிராம தேவதை கோவில் கட்டுவதற்கு, தனியார் நிறுவனம் இடம் தர தாமதித்து வந்த நிலையில், அப்பணிகள் முடிந்துள்ளதால், இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன.



ஜி.எஸ்.டி., சாலை விரிவாக்க பணிகள், விரைவில் துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் வாகனங்களின் நுழைவாயிலாக பெருங்களத்துார் பகுதி விளங்குகிறது. விபத்து அதிகரிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் ஐ.டி., நிறுவனங்களின் எண்ணிக்கை பெருக்கத்தால், பெருங்களத்துார் முதல் செங்கல்பட்டு மகேந்திரா சிட்டி வரையிலான, ஜி.எஸ்.டி., சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இது தவிர, கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், ஜி.எஸ்.டி., சாலை ஆகியவற்றில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, புறநகர் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் நின்று செல்ல, பெருங்களத்துாரில், தனியாக பேருந்து நிறுத்தம் உருவாக்கப்பட்டது.விபத்து அதிகரிப்புஎனினும், இரும்புலியூர் பாலம் முதல் வண்டலுார் வரை, வெளியூர் செல்லும், ஆம்னி மற்றும் அரசு பஸ்கள் அணிவகுத்து நிற்பதால், ஜி.எஸ்.டி., சாலையில், நெரிசலுடன் சேர்த்து விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.



இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து, ஆய்வு நடத்தினர். இதில், இரும்புலியூர் பாலம் முதல் இரணியம்மன் கோவில் வரை, 2.3 கி.மீ., துாரத்திற்கு, சாலையை விரிவாக்கம் செய்வதே, நெரிசலுக்கு தீர்வாக அமையும் என, முடிவு செய்யப்பட்டது.இதற்கான பணிகள், 2018, ஜூலையில் துவங்கின. இப்பணிக்காக, பெருங்களத்துார் எல்லையில், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இரணியம்மன் கோவிலின், 1,396 சதுர அடி நிலம் தேவைப்பட்டது. இதற்காக, கோவிலை அகற்ற, அறநிலையத் துறை அதிகாரிகளிடம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள், 'புதிதாக கோவில் கட்ட, அருகில் உள்ள தனியார் நிறுவனத்திடம், இடம் கேட்டுள்ளோம். நிறுவன அதிகாரிகளிடம் பேசி, இடத்தை வாங்கும் வரை, கால அவகாசம் கொடுங்கள்' என, நெடுஞ்சாலைத் துறையிடம் கூறி வந்தனர்.நெரிசல்இதனால், 80 சதவீத விரிவாக்க பணிகள் முடிந்திருந்த நிலையில், தொடர்ந்து, பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. பணிகள் நடக்காததால், தீபாவளி, பொங்கல் உட்பட, முக்கிய விசேஷ நாட்களில், போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, வாகனங்கள் திண்டாடுவது தொடர்கிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளை கடந்தும், முடிவுறாமல் இருந்த கோவில் நிலப் பிரச்னை, சமீபத்தில், முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவிலின் மொத்த பரப்பு, 5,291 சதுர அடி. இதில், 1,396 சதுர அடி நிலம் விரிவாக்கத்திற்கு தேவைப்படுவதாக, நெடுஞ்சாலைத் துறை சார்பில் கூறப்பட்டது. இதை வழங்கினால், கோவிலின் பெரும் பகுதியை இழக்க நேரிடும் எனக்கூறி, பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, வருவாய்த்துறை, பொதுமக்கள், தனியார் நிறுவன அதிகாரிகள் மற்றும் எங்கள் துறையின், உயர் அதிகாரிகள் இணைந்து, பேச்சு நடத்த முடிவானது.கொரோனா ஊரடங்கு காரணமாக, இரண்டு ஆண்டுகளாக, பேச்சு தள்ளிப்போன நிலையில், சமீபத்தில், 4,530 சதுர அடி நிலத்தை கோவிலுக்கு வழங்க, தனியார் நிறுவனம் சம்மதித்தது.அதற்கான, பத்திரபதிவு விரைவில், முடிந்து கோவில் நிலம், நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்படும்.அதன் பின், சாலை விரிவாக்கப்பணி முழு வீச்சில் மீண்டும் துவக்கப்பட வாய்ப்புள்ளது.அதை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவர். இதன் மூலம், சென்னையில் நீண்ட கால போக்குவரத்து பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X