பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பதாகை | சென்னை செய்திகள் | Dinamalar
பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பதாகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
03:42

பெசன்ட் நகர் : பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், சமூக சேவை அமைப்புடன் காவல் துறையினர் இணைந்து, விழிப்புணர்வு பதாகைகளை வைத்துஉள்ளனர்.



கடற்கரையில் பொழுதை கழிக்க வருவோர் அலையில் குளித்து விளையாடும் போது, ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்டு பலியாகின்றனர். இதில், நீச்சல் தெரிந்தவர்கள் கூட உயிரிழப்பது வாடிக்கைஆகிவிட்டது. குறிப்பாக, பெசன்ட்நகர் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில், அலை இழுத்து செல்லும் ஆபத்தான பகுதிகள் அடையாளம் காணப்பட்டன. அந்த இடங்களில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரோட்டரி அமைப்புடன், காவல் துறையினர் இணைந்து, விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதாகைகள் வைத்தனர். இந்நிகழ்ச்சியில், போலீஸ் உதவி கமிஷனர் நெல்சன், சாஸ்திரி நகர் ஆய்வாளர் ரமணி, ரோட்டரி அமைப்பைச் சேர்ந்த கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X