200 வார்டுகளில் 1,600 சிறப்பு முகாம்கள் ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
03:46

சென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, 200 வார்டுகளில், நேற்று நடந்த, 1,600 தடுப்பூசி சிறப்பு முகாம்களில், 2 லட்சத்து ஆயிரத்து 805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.



தமிழக அரசு உத்தரவுப்படி, அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சி சார்பில், இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 200 வார்டுகளில் நேற்று, 1,600 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னை, சென்ட்ரலில் நேற்று நடந்த தடுப்பூசி முகாமை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்து, ரயில் பயணியரிடமும், கொரோனா தடுப்பூசியின் அவசியம், முககவசத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழக தலைமை செயலர் இறையன்பு, அடையாறு மண்டலம், 173 வது வார்டில் உள்ள நகர்புற சமுதாய நல மருத்துவமனை, 172வது வார்டு, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், தேனாம்பேட்டை மண்டலம், 123வது வார்டு பீமன்னா கார்டன், 125வது வார்டு சாந்தோம் ஆரம்ப சுகாதார மையங்களில் நடந்த முகாம்களை ஆய்வு செய்தார்.



மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வேலு, சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயராணி, துணை கமிஷனர்கள் எஸ்.மனீஷ், விஷூமகாஜன், டி.சினேகா, சிம்ரன்ஜித் சிங், கோஹ்லன் உள்ளிட்ட அதிகாரிகளும் பல்வேறு முகாம்களை நேரில் ஆய்வு செய்தனர்.சென்னை மாநகராட்சியின் சார்பில், நேற்று நடத்தப்பட்ட 1,600 சிறப்பு தடுப்பூசி முகாம்களின் வாயிலாக, 2 லட்சத்து ஆயிரத்து 805 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன் மூலம், சென்னையில் தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இதே போல், தொடர்ந்து பல சிறப்பு முகாம்களை நடத்தி, 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X