கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை.. 53 ஆயிரம்  மாவட்டத்தில் நேற்று 640 மையங்களில் சிறப்பு ஏற்பாடு | கடலூர் செய்திகள் | Dinamalar
 கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை.. 53 ஆயிரம்  மாவட்டத்தில் நேற்று 640 மையங்களில் சிறப்பு ஏற்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:17

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் 53 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதுதமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை தொற்றிலிருந்து பாதுகாக்க பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி தமிழகத்தில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடலுார் மாவட்டத்தில் ஏற்கனவே 11 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னும் 9 லட்சம் பேருக்கு போட வேண்டியுள்ளது.இத்திட்டம் முழு அளவில் செயல்படுத்த கடந்த 12ம் தேதி ஒரே நாளில் முதல் கட்டமாக தமிழகத்தில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடலுார் மாவட்டத்தில் 88 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு 2வது முறையாக நேற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கடலுார் மாவட்டத்தில் 2வது முறையாக கொரோனா தடுப்பூசி செலுத்த, நேற்று காலை 7 முதல் மாலை 7.00 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் முகாம் அமைக்கப்பட்டது.கிராம ஊராட்சி அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்கள், பேரூராட்சி அலுவலகங்கள், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி மற்றும் கல்லுாரி வளாகங்கள், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 640 தடுப்பூசி மையங்கள் அமைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.இது குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீரா கூறுகையில், கடந்த வாரம் 12ம் தேதி நடந்த முகாமில் 88 ஆயிரம் இலக்கை அடைந்தோம்.இந்த வாரம் 53 ஆயிரம் பேருக்கு இலக்கு நிர்ணயித்து செலுத்தப்பட்டது, என்றார். புவனகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த தடுப்பூசி முகாம், புவனகிரி வட்டம் பி.உடையூர், குறிஞ்சிபாடி வட்டம் வழுதலம்பட்டு பகுதிளில் நடந்த முகாம்களை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு விவரங்கள் கேட்டறிந்தார். மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், மாவட்ட மலேரியா அலுவலர் கஜபதி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சிவக்குமார், அகிலா உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X