கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியின் மனைவி கொலை கடலூரில் 2 சிறுவர்கள் உட்பட நால்வர் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:22

கடலுார் : கடலுாரில், கள்ளக்காதல் விவகாரத்தில் ரவுடியின் மனைவி கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.



கொலை வழக்கில் செய்த 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.கடலுார், சுப்ராயலு நகரை சேர்ந்தவர் வீரா (எ) வீராங்கன், 30; பிரபல ரவுடியான இவர், கடந்த பிப்ரவரி 16ம் தேதியன்று, தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான குப்பங்குளத்தை சேர்ந்த கிருஷ்ணன், 32, என்பவரை புதுப்பேட்டை அருகே போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய கிருஷ்ணனின் மனைவி காந்திமதியை, 27, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, கத்தியால் சரமாரியாக வெட்டி சாய்த்தது.



பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய அவர் கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், புதுச்சேரி ஜிப்மருக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.கடலுார் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகின.இறந்த ரவுடி கிருஷ்ணனின் நண்பரான குப்பங்குளம் எத்திராஜ் நகரை சேர்ந்த வீரப்பன் மகன் அரவிந்த் (எ) வீரமணி, 23; என்பவருடன் காந்திமதிக்கு கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.



அரவிந்த் அடிக்கடி காந்திமதியின் வீட்டிற்கு சென்று வந்தார். இதனை காந்திமதியின் உறவினர்கள் கண்டித்தனர். இதனால், வீட்டிற்கு வர வேண்டாம் என காந்திமதி கூறியுள்ளார்.இதற்கிடையில், வேறு வாலிபர் ஒருவருடனும் காந்திமதிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குள் பிரச்னை பெரியதாகி மோதலாக வெடித்தது. 'எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது' என, காந்திமதியை அரவிந்த் மிரட்டியுள்ளார். இதனை காந்திமதி தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, காந்திமதியை கொலை செய்ய அரவிந்த் திட்டம் தீட்டி உள்ளார்.



அதன்படி, அரவிந்த் நண்பரும், காந்திமதியின் உறவினருமான 16 வயது சிறுவன்,அவரை டி.வி.எஸ்., ஸ்போர்ட்ஸ் (பி.ஒய்.01.பி.ஜி. 2539)வாகனத்தில் சம்பவம் நடந்த சீனிவாச நகருக்கு அழைத்து வந்தார்.அங்கு அரவிந்த், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்கள் சரவணன் மகன் சக்தி, 19, மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் சேர்ந்து காந்திமதியை கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்தது.அரவிந்த் உட்பட நால்வரையும் போலீசார் கைது செய்தனர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X