கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவர் கொலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:25

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து தன்னை துன்புறுத்தியதால் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை அடித்து கொன்றதாக மனைவி வாக்குமூலம் அளித்துள்ளார்.



இந்த சம்பவத்தில் கள்ளக் காதலனையும் காடாம்புலியூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த டி.புதுப்பாளையம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன்,40; சென்னையில் கார் டிரைவர்; இவரது மனைவி நதியா,33;இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன் தினம் நதியா, தனது கள்ளகாதலன் கோவிந்தராஜ் துணையோடு கணவர் ஜெகதீசனை கொலை செய்தார்.இது குறித்து பயிற்சி டி.எஸ்.பி.சத்யராஜ், காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிந்து நதியாவை நேற்று முன் தினம் கைது செய்தனர். கள்ளக் காதலன் கோவிந்தராஜ், 47; நேற்று கைது செய்யப்பட்டார்.விசாரணையில் நதியா அளித்த வாக்குமூலம்:எனது கணவர் ஜெகதீசன் சென்னைக்கு வேலைக்கு சென்றால், 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வருவார். கடந்த 3 ஆண்டுக்கு முன் கீழ்மாம்பட்டு வடக்கு தெருவை சேர்ந்த பைனான்சியர் கோவிந்தராஜ்,47; என்பவரிடம் கடன் வாங்கினேன்.பணத்தை கட்டிய போது எனக்கும் பைனான்சியர் கோவிந்தராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் பல முறை உல்லாசமாக இருந்து வந்தோம். இது தெரிந்த எனது கணவர் அடிக்கடி என்னை அவமானப்படுத்தி துன்புறுத்தி வந்தார்.நேற்று முன் தினம் காலை 11: 00 மணியளவில் நானும், எனது கணவரும் வீட்டில் இருந்த போது கடன் வசூலுக்கு வந்த கோவிந்தராஜிடம் நான் பேசினேன்.இதனை பார்த்த எனது கணவர் ஜெகதீசன் அவனிடம் சிரிச்சு பேசிவிட்டு வருகிறாய் என கூறி ஆபாசமாக திட்டினார்.இதனால் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் கோவிந்தராஜிற்கு போன் செய்து வரச் சொன்னேன். எனது கணவரை இருவரும் சேர்ந்து கோடாரி கட்டையால் தலையில் தாக்கினோம்.



இதில் சம்பவ இடத்தில் எனது கணவர் இறந்துவிட்டார்.எனது உடையும், கோவிந்தராஜ் உடையும் ரத்தக் கரையாகின. எங்கள் இருவரது உடைகளையும் எரித்து தடயங்களை அழித்தோம். பின், கணவர் கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்ததாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து தகவல் கூறினேன். ஆம்புலன்ஸ் உதவியாளர் வந்து எனது கணவரை பரிசோதனை செய்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.பின், காடாம்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிந்து என்னையும், கோவிந்தராஜையும் கைது செய்தனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X