தனியார் மருத்துவமனை முற்றுகை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:27

கடலுார் : தனியார் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் முதியவர் இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.



குறிஞ்சிப்பாடி அடுத்த கஞ்சமநாதன்பேட்டையைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 68; இவருக்கு கடந்த 15 ஆண்டுகளாக சர்க்கரை நோய் பாதித்து வலது காலில் காயம் ஏற்பட்டது. உடல்நிலை பாதித்ததால் கடந்த 11ம் தேதி கடலுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை முடிந்து 13ம் தேதி வீடு திரும்பினார். 14ம் தேதி மீண்டும் உடல்நிலை பாதித்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 9:00 மணிக்கு, அவர் இறந்து விட்டதாக உறவினர்களிடம் மருத்துவமனை ஊழியர்கள் கூறினர்.சரியான சிகிச்சை அளிக்காததால் ராதாகிருஷ்ணன் இறந்ததாகவும், டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,



இல்லையெனில் சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு ஊழியர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார், புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். தொடர்ந்து 11:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது. ராதாகிருஷ்ணன் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கடலுார், புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X