ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவியில் போட்டியிட ஆர்வமில்லை வருவாய்க்கு வாய்ப்புள்ள தலைவர் பதவி மீது மோகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:44

விழுப்புரம் : உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கட்சியினரிடம் ஆர்வம் குறைந்துள்ளது.



வருவாய்க்கு வாய்ப்புள்ள தலைவர் பதவிக்கு போட்டியிட மோகம் அதிகரித்துள்ளது.லோக்சபா, சட்டசபை தேர்தல்கள் கட்சி ரீதியாக தேசிய அளவிலும், மாநில அளவிலும் பரபரப்பை ஏற்படுத்தும். கிராம அளவில் பரபரப்பு குறைவாகவே இருக்கும். உள்ளாட்சித் தேர்தல் என்பது ஒவ்வொரு கிராமத்திலும் திருவிழா போன்று நடைபெறும்.கிராம அளவில் முக்கியஸ்தர்கள் தங்களின் செல்வாக்கை நிரூபிக்கவும். பொது சேவையில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் உள்ளாட்சித் தேர்தலை வாய்ப்பாக கருதுகின்றனர்.அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த தேர்தல் மூலம் அதிகாரத்தை கைப்பற்றுகின்றனர். எனவே, உள்ளாட்சித் தேர்தல் மற்ற தேர்தல்களை விட கிராமங்களில் உற்சாகமானதாக இருக்கும்.தமிழகத்தில் பிரிக்கப்பட்டதால் நிறுத்தப்பட்ட 9 மாவட்டங்களில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 15ம் தேதி துவங்கியது.கடந்த காலங்களில் கட்சியிலும், மக்களிடமும் செல்வாக்கு பெற்றவர்களும் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவே விரும்பினர்.



இந்த தேர்தலில் வெற்றி பெறும் அளவிற்கு செல்வாக்கு இருப்பவர்களும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டவில்லை. மாறாக ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நபர் சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர்களில் 25 சதவீத வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுபவர் மூன்று முதல் நான்கு ஊராட்சி பகுதி வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.இந்த பதவிகளுக்கு போட்டியிட அரசியல் கட்சியின் தயவும் தேவை. கட்சியில் சீட் ஒதுக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.



வெற்றி பெற்றாலும் பொது மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற இவர்களுக்கென தனி நிதி கிடையாது.கட்சியில் ஒதுக்கப்படும் ஒன்றிரண்டு கான்ட்ராக்ட் வேலைகளைத் தவிர வேறு வருவாய்க்கு வாய்ப்பில்லை. தலைவர் பதவிக்காக போட்டியிடுபவர் கட்சி தயவின்றி சுயேச்சையாக போட்டியிடுகின்றனர்.கிராம மக்களின் தேவைகளை ஊராட்சி நிதியில் இருந்து நிறைவு செய்ய முடியும். மத்திய, மாநில அரசுகளின் திட்டத்தை செயல்படுத்தும் அதிகாரமும், மத்திய மாநில அரசின் நிதியை கையாளும் அதிகாரமும் ஊராட்சி தலைவர்களுக்கு உள்ளது.ஊராட்சி நிதியை செலவு செய்யும் அதிகாரம் பெற்ற தலைவர் பதவியால் கனிசமான வருவாய்க்கு வாய்ப்புள்ளது.மக்களுக்கு சேவை செய்யவும், கிராம வளர்ச்சிக்காக நேர்மையாக சிலர் போட்டியிட விரும்பினாலும், பெரும்பான்மையானவர்கள் சொந்த ஆதாயம் கருதியே தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். எனவே இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கான மோகம் பலரிடமும் அதிகரித்துள்ளது.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X