3 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி | கடலூர் செய்திகள் | Dinamalar
3 குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
04:45

விருத்தாசலம் : கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி, 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணலுார் காலனி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, 35; இவரது மனைவி விஜயலட்சுமி, 30; இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. தர்ஷினி, 7; முத்தமிழ், 5; என்ற இரு மகள்கள், சத்ரியன், 3; என்ற மகனும் உள்ளனர்.விஜயலட்சுமியின் தங்கை பேபியை முத்துசாமி இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இதில் 2 வயதில் மகன் உள்ளார். இதனால் விஜயலட்சுமி, முத்துசாமி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டது. முத்துசாமி இருவருடனும் தனித்தனியாக குடும்பம் நடத்தி வருகிறார்.



இதற்கிடையே பேபியை தனது வீட்டிலேயே குடியமர்த்த போவதாக விஜயலட்சுமியிடம் முத்துசாமி கூறியதால் நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி வீட்டில் தனது பிள்ளைகள் தர்ஷினி, முத்தமிழ், மகன் சத்ரியன் ஆகியோருக்கு நேற்றிரவு 7:00 மணிக்கு ஹார்லிக்ஸ்சில் விஷ மருந்து கலந்து கொடுத்து, தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நால்வருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X