திருவாடானைக்கு தகுதி இருந்தும் தரம் உயரவில்லை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
06:57

திருவாடானை : தாலுகா தலைநகரமாக விளங்கும் திருவாடானை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தலைநகரமாகவும், ஊராட்சி ஒன்றியமாகவும் திகழ்கிறது. வருவாய்த்துறை, டி.எஸ்.பி. அலுவலகம், கோர்ட், உதவி கல்வி அலுவலகம், அரசு மருத்துவமனை, தபால் அலுவலகம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் உள்ளன. ஆனால் திருவாடானை கிராம ஊராட்சியாகவே உள்ளது.



இந்த ஊராட்சியில் வடக்கு, மேற்கு, தெற்கு, கிழக்கு என நான்கு வீதிகளாகவும், அண்ணாநகர், சிநேகவல்லிபுரம், பண்ணவயல், எல்.கே.நகர், சமத்துவபுரம், நரிக்குறவர்கள் காலனி, குருவிக்காரர்கள்குடியிருப்பு ஆகிய பகுதிகள் அடங்கியது. மக்கள் தொகை, ஆண்டு வருமானம், செலவு என பேரூராட்சியாவதற்கு போதுமான தகுதி இருந்தும் தரம் உயராமல் இருப்பதால் அடிப்படை வசதிகளுக்காக இப் பகுதி மக்கள் ஏங்குகின்றனர்.



வருமானம் வரும் ஊராட்சியாக இருந்தும் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் குறைந்த அளவில் மட்டுமே துாய்மை பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு போதுமான சம்பளம் பற்றாக்குறையால் குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். ஊராட்சி விரிவாக்க பகுதிகளில் போதுமான நிதி பற்றாக்குறையால் சாலை சீரமைக்கும் பணிகளை தொடர முடியவில்லை. திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் 47 ஊராட்சிகள்உள்ளடக்கிய பெரிய ஒன்றியமாக உள்ளது.



20 கவுன்சிலர்கள் உள்ளனர். பேரூராட்சியாக தரம் உயர்ந்தால் நிர்வாக அலுவலர், சுகாதார ஆய்வாளர், அலுவலக பணியாளர்கள், பிற பணிகளுக்கு உதவியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசின் நிதி உதவி கூடுதலாக கிடைக்கும்.இது குறித்து ஊராட்சி துணை தலைவர் மகாலிங்கம் கூறியதாவது:திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்தினால், மக்கள் வாழ்க்கை மேம்படும். அடிப்படை வசதிகள் மேம்படும்.



கூடுதலாக நிதி ஒதுக்கப்படுவதால் பல்வேறு வளர்ச்சி பணிகளை துவக்க முடியும். ஆகவே திருவாடானையை பேரூராட்சியாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.ஊராட்சி தலைவர் இலக்கியாராமு கூறியதாவது:தாலுகா தலைநகரமாக இருப்பதால் குடிநீர், தெருவிளக்கு, சாலை, வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு என அடிப்படை வசதிகள்செய்யப்பட்டுள்ளது.



இந்த ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என்று அ.தி.மு.க., ஆட்சியின் போது பலமுறை மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கான தகுதி விபரம் கேட்கப்பட்டது. அதன் விபரமும் அறிக்கையாக தயார் செய்து அனுப்பப்பட்டது என்றார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X