ராமேஸ்வரத்தில் ரூ.10 லட்சம் கடல் அட்டை பறிமுதல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
07:13

ராமேஸ்வரம் --: ராமேஸ்வரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 லட்சம்மதிப்புள்ள கடல் அட்டையை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.



மண்டபம் அருகே மன்னார் வளைகுடா கடலில் இந்திய கடலோர காவல் படையினர்ஹோவர் கிராப்ட் கப்பலில் வனத்துறையினருடன் இணைந்து ரோந்து சென்றனர். அப்போது மனோலி தீவு அருகே நடுக்கடலில் நங்கூரமிட்டு நின்ற நாட்டுப்படகை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 1.5 டன் கடல் அட்டை இருந்தது.



சற்று துாரத்தில் பல படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து உள்ளனர். இப்படகில் யாரும் இல்லாததால், கடல் அட்டையுடன் படகை பறிமுதல் செய்து மண்டபம் கொண்டு வந்தனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும். நாட்டுபடகில் மீன்துறை அனுமதி பதிவு எண் இல்லாததால் படகு உரிமையாளர் யார், இக்கடல் அட்டையை இலங்கைக்கு கடத்த முயன்ற கடத்தல்காரர்கள் யார் என வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.



தேவிபட்டினத்திலும் பறிமுதல்: உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம் தலைமையில், வனவர் சடையாண்டி, வனகாப்பாளர்கள் பிரபு, சுதாகர், மணிகண்டன், சக்திதேவி ஆகியோர் தேவிப்பட்டினம்கடற்கரையில் நேற்று சோதனையிட்டனர்.அப்போது இலங்கைக்கு கடத்த இருந்த 40 கிலோ கடல் அட்டை, பத்து கடல்குதிரைகளை பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தேவிப்பட்டினத்தை சேர்ந்த முகமது யாசர் அலி 33, கைது செய்யப்பட்டார்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X