பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? மக்கள் எதிர்பார்ப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டிற்கு வருமா? மக்கள் எதிர்பார்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

20 செப்
2021
07:19

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நகராட்சிகளான பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இல்லாத நிலையில் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.



பாதாள சாக்கடைதிட்டம் செயல்படுத்தப்பட்ட ராமநாதபுரத்தில் இந்த திட்டம்தோல்வியடைந்துள்ளது.மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, ராமேஸ்வரம் ஆகிய நான்கு நகராட்சிகள்உள்ளன. பரமக்குடி நகராட்சியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்வசிக்கின்றனர். இதுவரை பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படவில்லை.



ராமநாதபுரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்தாலும், திட்டம் தோல்வியடைந்துள்ளது. இங்குள்ள 33 வார்டுகளில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குடியிருப்பு அதிகரித்த நிலையில், மக்கள் பெருக்கத்திற்கு ஏற்றதாக பாதாள சாக்கடை திட்டம் இல்லை.சாக்கடை நீர் முறையாக அகற்றப்படாமலும்,அடைப்பு ஏற்படுவதாலும் தொடர்ந்து அனைத்து தெருக்களிலும் ஆறாக ஓடுகிறது.ராமேஸ்வரம் நகராட்சியில் ரூ.70 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணி மூன்றாண்டுகளாகஆமை வேகத்தில் நடக்கிறது.



நகராட்சியில் 21 வார்டுகள் இருந்தாலும்பிரதானமான 13 வார்டுகள், தேசிய நெடுஞ்சாலையில் லட்சுமண தீர்த்தம் முதல் வேர்கோடு வரை திட்டப்பணி நடக்கிறது.* கீழக்கரை நகராட்சியில் 21 வார்டுகளில் 60 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு 2011ல் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை திட்டத்திற்கு தீர்மானம் நிறைவேற்றியது. இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் மக்கள் கழிவு நீரோடு தவிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X