உப்பூர் அனல்மின் நிலையத்திற்கு நிலம்; விவசாயிகள், மீனவர்கள் எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 செப்
2021
23:55

ராமநாதபுரம் : உப்பூரில் அனல் மின்நிலையம் அமைக்க நிலம் எடுக்கும் பணிக்கு விவசாயிகள், மீனவர்கள்எதிர்ப்பு தெரிவித்து, ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர்.



ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அனல்மின்நிலையைம் அமைக்கும் பணி நடந்தது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், மீனவர்கள்எதிர்ப்பு தெரிவித்து பசுமை தீர்ப்பாயம், சென்னை உயர்நீதிமன்றம் மூலம் தடைபெற்றனர். இதனை எதிர்த்து தமிழக மின்வாரியத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதில் மின்வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்துஉள்ளது. இதனையடுத்து அனல்மின்நிலையத்திற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை மின்சார வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.



நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில்டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில் உப்பூர் விவசாயிகள், மீனவ பிரதிநிதிகள் தங்களது நிலங்களை ஒப்படைக்க போவது இல்லை, இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். அப்போது அங்குவந்த எம்.பி., நவாஸ்கனி இடமும் தங்களுக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை வைத்தனர்.



விவசாயிகள் கூறுகையில், '2013 முதல் உப்பூர் அனல்மின்நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்தநிலையில் தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள்எந்தமுன் அறிவிப்பு இல்லாமல் நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் கொடுத்துள்ளனர். 350க்கும் மேற்பட்டட நபர்களிடமிருந்து 900 ஏக்கர் நிலம் எடுக்க உள்ளனர். தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக அதிகளவில் உப்பூர் பகுதியில் நெல்விளைகிறது. ஆகையால் இத்திட்டம் தேவையில்லை, இதுதொடர்பாக விரைவில் முதல்வர்ஸ்டாலினை சந்திக்க உள்ளோம்,'என்றனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X